×

புயல், மழையால் பாதித்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம்

திருவாரூர், ஜன.5: தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கடும் மழையில் லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் காப்பீடு தொகை கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ண தொகையாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதுடன், இதன்மூலம் 5 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருவாரூரில் நேற்று தமிழக விவசாயிகள் நல சங்க கூட்டம் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமியிடம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என அளிக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் இழப்பீடு தொகை நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் என அறிவித்துள்ளார். ஏற்கனவே 13 ஆயிரத்து 500 என்று நிவாரணத் தொகை இருந்த நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் சார்பில் முதல்வர் பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : storms ,
× RELATED சுனாமி, புயலில் இருந்து மக்களை...