×

மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் பொங்கல் பண்டிகைக்கு முன் மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் இயக்க வேண்டும்

கும்பகோணம், ஜன.5: கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் 57வது ஆண்டு இறுதி பொது பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணை தலைவர் ஜமீல் தலைமை வகித்தார். முனைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும் பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வர வசதியாக மயிலாடுதுறை - திருச்சி ரயில் பாதையில் அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். பயணிகள் பயன்பாடு மிகுந்த பாபநாசம் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கபட்டு உள்ளதால், விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி, மயிலாடுதுறை - திருவாரூர் மற்றும் காரைக்கால் - தஞ்சாவூர் - திருச்சி, ரயில்வே பாதையில் இயங்கும் சாதாரண பயணிகள் ரயில்வண்டிகளை மெயின் லயன் மின்சார ரயில்வண்டிகளாக இயக்கவும், மயிலாடுதுறையில் மின்சார தொடர் ரயில் வண்டிகளுக்கான பணிமனை அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில், 2020 - 2023ம் ஆண்டுகளுக்கான சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய தலைவராக சண்முகம், துணை தலைவராக ஜமீல், செயலாளராக கிரி, பொருளாளராக மாறன், இணை செயலாளர்களாக சுப்ரமணியன், சரவணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : route ,Mayiladuthurai-Trichy ,Pongal ,
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...