×

பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதலமைச்சர் பாராட்டு!

 

சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டில் ஒளிரும் பெரியார் ஓவியத்தை தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் தோட்டா தரணி. பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியே விருது அறிவிக்கப்பட்டது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து செவாலியே விருது பெற்ற மிகப்பெரிய ஆளுமைகள் வரிசையில் தோட்டா தரணி இணைவது பெருமை. பார் போற்றும் தோட்டா தரணியின் சாதனைக்கு பாராட்டுகள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags : Chief Minister ,Thota Dharani ,French government ,Chennai ,M.K. Stalin ,Periyar ,Oxford ,Chevalier ,French government… ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...