×

ஊர்க்காவல் படையினர் மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் சேவையாற்ற வேண்டும்

பெரம்பலூர்,ஜன.5: பெரம்ப லூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்குத் தேர்வுசெய்யப் பட்ட 31நபர்களுக்கு 45நாள் பயிற்சி நிறைவையொட்டி அணிவகுப்பு மரியாதை நடத்தப் பட்டது. இதில் வாழ்த்தி பேசிய பெரம்பலூர் எஸ்பி ஊர்க்காவல் படையினர் மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் சேவையாற்ற வேண்டும் என்றார். பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 165 ஆண்கள், 55 பெண்கள் என 220 மொத்த பணியிடங்கள் உள்ளன. இதில் 27 ஆண்கள், 4பெண்கள் என 31 காலிப்பணியிடங்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் தகுதித் தேர்வு நடை பெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 31 ஊர்காவல்படையினருக்கும், திரு ச்சி-நெடுஞ்சாலையில், தண்ணீர்பந்தல் அருகே உள்ள பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை வளாகத்தில் எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை டிஎஸ்பி சுப்புரா மன் தலைமையில் போலீசார் மேற்கண்ட 31 ஊர்காவல் படையினருக்கும் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் நிறைவு விழாவிற்கு விழாவையொட்டி நேற்று ஆயுதப்படைவளாகத்தில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமை வகித்தார். ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பராமன்,பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பயிற்சி பெற்ற ஊர்காவல் படையினர் அனைவரும் அணிவகுப்பு நடத்தி மரியாதை செய்தனர். இதனை எஸ்பி நிஷா பார்த்திபன் ஏற்றுக்கொண்டு வாழ்த்தி பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 165 ஆண்கள், 55பெண்கள் என மொத்தமுள்ள 220 பணியிடங்களும் தற்போது நிரப்ப ப்பட்டு விட்டன. காலியாக இருந்த 31 பணியிடங்களு க்கு தேர்வு செய்யப்பட்ட ஊ ர்க்காவல் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற அனை வரும் காவல்துறையினரோடு இணைந்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை, மற் றும் திருவிழா, பொதுக் கூட்டங்கள், அரசு அலுவலகங் களுக்கான பந்தோபஸ்து பணிகளில், கடமை உணர்வோடு.பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் சேவையாற்ற வேண்டும் என்றார்.இந்த பயிற்சி நிறைவுஅணிவகுப்பு விழா வில், ஆயுதப்படை இன்ஸ் பெக்டர் சுப்பையா மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள் உட னிருந்தனர்.

Tags : garrison ,
× RELATED கல்வராயன்மலை வாழ் மக்களின் நிலங்களை...