×

வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் : போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். வரி செலுத்தாததால் அபராதம் விதிக்கும் கேரளா, கர்நாடக அரசுகளுக்கு சில ஆம்னி பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில ஆம்னி பேருந்து சங்கங்கள் கேரளா, கர்நாடகாவுக்கு இன்று பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இதனால் பயணிகள் அவதியடையும் நிலை உள்ளதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், வழக்கமாக வார இறுதி நாட்களில் இயக்கப்படும் 456 விரைவுப் பேருந்துகளை இன்று இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், கர்நாடகாவிற்கு 183 பேருந்துகள், கேரளாவிற்கு 85 பேருந்துகள், ஆந்திராவிற்கு 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

Tags : State Express Transport Corporation ,Transport Department ,Chennai ,Omni bus ,Kerala ,Karnataka governments ,
× RELATED ரூ.98.92 கோடி செலவில் மீன்பிடி...