×

ஆங்கில புத்தாண்டையொட்டி 2 நாளில் ₹7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

நாமக்கல், ஜன.4: நாமக்கல் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த 2 நாட்களில் ₹7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாது. நாமக்கல் மாவட்டத்தில், 190 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. புத்தாண்டையொட்டி அனைத்து கடையிலும் கூடுதலாக மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 31 மற்றும் 1ம் தேதி (புத்தாண்டு தினம்) ஆகிய 2 நாட்களும் மொத்தம், ₹7.6 கோடிக்கு மதுபானங்கள், பீர்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் ₹32 லட்சத்துக்கு இந்த ஆண்டு அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த 31ம் தேதி மட்டும் அதிகபட்சமாக ₹4.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. மதுக்கடைகளின் அருகாமையில் பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுபாடுகளுடன் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல மாதமாக பார்கள் திறந்து தான் இருக்கிறது. மதுவிலக்கு மற்றும் உள்ளூர் போலீசார் இதை கண்டுகொள்வதில்லை. தற்போது அரசே பார்களை திறக்க அனுமதி அளித்துள்ளதால், 24 மணி நேரமும் பார்களில் மதுவிற்பனை கொடி கட்டி பறக்கிறது.

பார்களில் 50 சதவீத இருக்கைகளின் தான் மதுபிரியர்களை அனுமதிக்கவேண்டும். பாருக்குள் நுழையும் போது, கிருமி நாசினியை கைகளை சுத்தம் செய்யவேண்டும் என பல விதிமுறையை அரசு அறிவித்திருந்தாலும், நாமக்கல் மாவட்டத்தில் எந்த விதிமுறையும் பார்களில் பின்பற்றப்படவில்லை. இதை டாஸ்மாக் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. உள்ளூர் போலீசாரும், பார்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, பார்களில் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்