×

கடவுளை நினைத்து தியானம் செய்தால் நாம் கடவுளை அடைய முடியும்

கோவை, ஜன.4: கோவை  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாேரா 2021’ நிகழ்ச்சியின் 3-ம் நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பாடகர்  ராம் பரசுராம் கலந்து கொண்டு  அருளாளர் கபீர்தாஸ் பற்றியும் மற்றும் அவர் இயற்றிய பாடல்களின் மகிமைகளை பற்றியும் பேசினார். இவ்விழாவில் பாடகர்  ராம் பரசுராம் பேசியதாவது, ‘‘ஒரு விவசாயி தன்னுடைய விவசாய நிலத்தை மிருகங்களிடம் இருந்து எப்பி பாதுகாக்கிறாரோ, அதேபோல மனிதன் தன்னுடைய ஐந்து புலன்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த புலன்கள் மூலமாகத்தான்  மனிதன்  தவறு செய்யத் தூண்டப்படுகிறான். ஆகையால் இந்த  ஐந்து புலன்களை கட்டுப்படுத்துவதற்கு தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்வதன் மூலம் மனிதன் தன் கர்ம வினைகளை அறுத்து தான் ஒரு யோகி என்ற நிலைக்கு முன்னேறுகிறான். கடவுளை நினைத்து தியானித்தால் நாம் கடவுளை அடைய முடியும். வாழ்க்கை என்பது 5 தத்துவங்கள் மற்றும் 3 குணங்களினால் ஆனது. நமது ஆன்மாவை அசுத்தப்படுத்தாமல் வாழ்ந்து அதனை கடவுளுக்கு திருப்பித்தர வேண்டும்’ என பேசினார்.

Tags : God ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…