×

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கூடுவாஞ்சேரி: விடியற்காலையில் பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் நோக்கி நேற்று விடியற்காலை 5 மணி அளவில் பாறாங்கற்கள் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. அப்போது கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் வரும் போது லாரி நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பாறாங்கற்கள் சாலையில் சிதறியது.

இதில் லாரி டிரைவர் படுகாயத்துடன் சிக்கியதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று டிரைவரை போராடி மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிய லாரி டிரைவரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் வேறொரு லாரியை வர வைத்து சாலையில் சிதறி கிடந்த பாறாங்கற்களை அகற்றினர். இதனால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Lorry ,Guduvancheri GST road ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது