×

சிவகங்கை சிஇஓ பொறுப்பேற்பு

சிவகங்கை, நவ.7: சிவகங்கை மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) நேற்று பொறுப்பேற்று கொண்டார். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய பாலுமுத்து, கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர்(டிஇஓ) மாரிமுத்து கூடுதல் பொறுப்பாக முதன்மை கல்வி அலுவலர் பணியையும் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்ட முன்மை கல்வி அலுவலராக இருந்த பால தண்டாயுதபாணி சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று சிவகங்கை அலுவலகத்தில் மாவட்ட முன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.

Tags : Sivaganga ,CEO ,District Chief Education Officer ,Balumuthu ,District Education Officer ,DEO ,Marimuthu ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா