×

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் போர்வெல் மோட்டார் ஓராண்டாக பழுது புழக்கத்திற்கு தண்ணீரின்றி பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி, ஜன. 4: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் ஓராண்டாக போர்வெல் மோட்டார் பழுதடைந்து இருப்பதால், புழக்கத்திற்கு தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சி, சக்கம்பட்டி பகுதியில் உள்ள 2வது வார்டு நாகம்மாள் கோயில் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து, தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த போர்வெல் தண்ணீரை அப்பகுதி மக்கள் புழக்கத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.இந்த பேர்வெல் மேட்டார் கடந்த ஓராண்டாக பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே இந்த போர்வெல் மோட்டாரை பேரூராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Andipatti Chakkampatti ,
× RELATED ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் போர்வெல் மோட்டார் பழுது சீரமைப்பு