×

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் போர்வெல் மோட்டார் பழுது சீரமைப்பு

ஆண்டிபட்டி, ஜன. 5: தினகரன் செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் ஓராண்டாக பழுதாகி கிடந்த போர்வெல் மோட்டார் பழுதை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. ஆண்டிபட்டி பேரூராட்சி 2வது வார்டு சக்கம்பட்டி பகுதியில் உள்ள நாகம்மாள்கோயில் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டது. இதன் மோட்டார் ஓராண்டுக்கு முன் பழுதானது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், புழக்கத்திற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழுதான போர்வெல் மோட்டாரை சரிசெய்யும் பணியை, பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.  இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Andipatti Chakkampatti ,
× RELATED ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் போர்வெல்...