×

எம்எல்ஏ மனுக்கள் பெற்றார் வலங்கைமானில் 5 கிராமங்களில் 218 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2.74 கோடி சுழல் நிதி கடன்

வலங்கைமான், ஜன.4: வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஹரித்துவாரமங்கலம், உள்ளிட்ட 5 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 218 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான வங்கிகடனை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஹரித்துவாரமங்கலம், தெற்குபட்டம், ஏரிவேளுர், ஆவூர், இனாம்கிளியூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 27 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 218 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி மகளிர் திட்ட இயக்குனர் லேகா தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆசைமணி, திருவாரூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் கோபால், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், நீடாமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 218 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வங்கிகடனை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.16 கோடி வங்கிகடன் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஹரித்துவாரமங்கலம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 40 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.57.20 லட்சமும் , தெற்குப்பட்டம் ஊராட்சியில் 32 குழுக்களுக்கு ரூ.35.15 லட்சமும், ஏரிவேளுரில் 45 குழுக்களுக்கு ரூ.58.05 லட்சமும், ஆவூரில் 51 குழுக்களுக்கு ரூ.55.77 லட்சமும், இனாம்கிளியூரில் 50 குழுக்களுக்கு ரூ.68.05 லட்சமும் என 218 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது என்றார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நிவர் மற்றும் புரெவி புயலினை தொடர்ந்து பொழிந்த கனமழையினால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நெல் பரப்பு 96191.50 ஹெக்டேர். இதனால் 1,24,357 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மூத்த விவசாய சங்க பிரதிநிதிகளாலும் விவசாயிகளாலும் பாராட்டக்கூடிய அளவில் 1 ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 என்றிருந்த விதியினை தளர்த்தி 1 ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரமாக உயர்த்தி முதல்வர் வழங்கியுள்ளார். வேளாண்மை துறை சார்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.192.38 கோடி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. தேவையான காலங்களில் தேவையான உதவியினை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார் என்றார்.

Tags : MLA ,villages ,Valangaiman ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...