×

பூட்டுத்தாக்கு- திருவலம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை. தடை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாடினால் நடவடிக்கை

வேலூர், ஜன.1: வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எஸ்பி செல்வகுமார் எச்சரித்துள்ளார். இதுகுறித்து வேலூர் எஸ்பி செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். செக்போஸ்ட் அமைத்தும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்புவது, போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

மாவட்டத்தில் டோல்கேட்கள், சோதனை சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு, போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்படுவார்கள். அதேபோல் அதிவேகமாகவும், பைக்ரேசில் ஈடுபடும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 58 இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வாகன சோதனை செய்யப்படும். இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்கள் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு காவல்துறை மூலம் வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ் பெற பரிந்து செய்ய முடியாது. எனவே, மேற்கண்ட அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடித்து பாதுகாப்பாக புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாட வேண்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags : Lockout- Tiruvallam Roadside ,
× RELATED நோட்டீஸ் கொடுக்க வந்த மாநகராட்சி...