சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பு நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் காரை மறித்து, அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அருள் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அருள் எம்.எல்.ஏ. மற்றும் உடன் சென்ற காரையும் வழிமறித்து சரமாரியாக தாக்கியதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் காயமடைந்துள்ளனர்.
