×

மேலநீலிதநல்லூரில் ரூ.2.9 கோடியில் 566 பயனாளிகளுக்கு இலவச ஆடு, கோழிகள்

சங்கரன்கோவில், ஜன. 1: சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குநர் முகம்மதுகாலித் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் கலையரசி வரவேற்றார். உதவி இயக்குநர் ரஹ்மத்துல்லா திட்ட விளக்கவுரை ஆற்றினார். விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு 566 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 91 லட்சத்து 8 ஆயிரத்து 200 மதிப்பில் வெள்ளாடுகள் மற்றும் நாட்டு கோழிகளை வழங்கி பேசியதாவது: தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். கடைக்கோடி கிராம பகுதிகள் வரை பொதுமக்களை தேடி அரசு நலத்திட்டங்கள் வந்தடைகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவியாக கால்நடை துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்படுவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை அரசு வழங்கி வருகிறது, என்றார். நிகழ்ச்சியில் கால்நடை துறை உதவியாளர்கள் ரகுமான், சேது, முத்துமாடத்தி, செல்வமணி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பையாபாண்டியன், வேல்முருகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டாக்டர்கள் நாகராஜன், வசந்தா, மகேந்திரன், அந்தோணிராஜ் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சுருளிராஜ் நன்றி கூறினார்.

Tags : Melaneelithanallur ,
× RELATED விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில்...