×

24,000 சதுர மீட்டர் பரப்பளவில் எகிப்தில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு

கெய்ரோ: சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்க மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகே, பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படும் கிசாவில் உள்ள குஃபுவின் பெரிய பிரமிடு அருகே கிரான்ட் எகிப்திய அருங்காட்சியகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பகுதியளவு திறக்கப்பட்டது.

24,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய கலைப்பொக்கிஷங்கள் இடம்பெற உள்ளன. 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

Tags : Egypt ,Cairo ,Grand Egyptian Museum ,Great Pyramid of Khufu ,Giza ,Ancient World ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...