×

அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் : மாஜி அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என்று மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் வடிக்கிறேன். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். துரோகத்தின் நோபல் பரிசு எடப்பாடி பழனிசாமிக்குதான் கொடுக்க வேண்டும்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு ஏ1 ஆக எடப்பாடி உள்ளார்..”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Magi Minister ,Senkottayan ,Erode ,Magical Minister ,Sengotayan ,Adimuka ,Jayalalitha ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...