×

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு சிறுமுகை காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

மேட்டுப்பாளையம், நவ.1: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு சிறுமுகை காவல்துறை சார்பில் பாரத் வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிகளை சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, பள்ளியின் முதல்வர் சசிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தென் திருப்பதி கோவில் பகுதியில் இருந்து ராமம்பாளையம் வரை சுமார் 1.5 கிமீ தொலைவு மாரத்தான் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

Tags : Sirumugai Police ,National Unity Day ,Mettupalayam ,Sardar Vallabhbhai Patel ,Bharat Vidya Niketan School ,Inspector… ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...