×

அயலகத்தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் வலைதள பக்கம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

சென்னை: அயலகத் தமிழர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்வதற்காக அயலகத்தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரக வலைதள பக்கத்தை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். அயலகத் தமிழர் தினம் 2026 விழாவில் கலந்துகொள்ள விரும்பும் அயலகத் தமிழர்கள் தங்களது விவரங்களை “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின்” வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வலைதள பக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு, வலைதள பக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் வள்ளளார், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Neighbourhood Welfare and Rehabilitation Commission ,Minister ,Nassar ,Chennai ,Tamils ,Neighbourhood Tamil Day 2026 Festival ,Neighbourhood ,Tamil ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்