×

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கத்துக்கு சசிகலா கடும் கண்டனம்

சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி இருப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அதிமுக என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். இதுபோன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம். தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

Tags : Sasikala ,Chennai ,Chengottaian ,Adamugawa ,Sengkottayan ,
× RELATED சொல்லிட்டாங்க…