×

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சென்னையில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்

சென்னை: சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களால் பயற்சி வழங்கப்பட்டது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தை வழங்குதல், இறந்தவர்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோர்களை இக்கணக்கெடுப்பின்போது கண்டறிதல், குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந்தவர்களையும் கணக்கெடுப்பு பணியின் போது கண்டறிந்து கணக்கெடுப்பு படிவத்தினை வழங்குதல் உள்ளிட்ட தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கண்காணிப்பில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tags : Chennai ,Kumaragurubaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்