×

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சால் இந்திய அணி 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டி20 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் 2வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்தார்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Tags : 2nd T20 ,Indian ,Melbourne ,T20 ,Melbourne Cricket Ground, Australia ,Josh Hazlewood ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...