×

நடுக்கடலில் மீன் பிடித்தபோது படகில் ஓட்டை: டிரைவர் உள்பட 8 பேர் பத்திரமாக மீட்பு

திருப்போரூர்: புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த தேவநாதன், போத்துராஜ் ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா, ஜோதிபாசு,  நாகராஜ், தனசேகரன், கோவிந்தராஜ், அய்யனார் ஆகியோர் கடந்த 27ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் கடலுக்கு சென்றனர். படகை மேகநாதன் என்பவர் இயக்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது. படகில் ஓட்டை இருப்பது தெரிந்தது. உடனே அவர்கள், மீண்டும், புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதிக்கு திரும்ப திட்டமிட்டனர். ஆனால், நீண்ட தூரம்  செல்லும் அளவுக்கு படகு இயங்காது என அறிந்தனர். அதற்குள், தண்ணீர் அதிகளவில் வெளியேறி, படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அவர்கள், அந்த ஓட்டையை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை.

இதையடுத்து, மீன் பிடித்து கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள கோவளத்துக்கு படகை ஓட்டி வந்தபோது, குன்றுக்காடு என்ற பகுதி நட்சத்திர ஓட்டலின் பின்புறம் கரை ஒதுங்கியது. இதையடுத்து படகில் இருந்தவர்கள். படகு  உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவளம் மீனவர்களை உதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர். அதன்படி, கோவளம் மீனவர்கள் அங்கு சென்று படகில் இருந்த 7 மீனவர்கள் மற்றும் படகோட்டியை பாதுகாப்பாக மீட்டனர். இதில், ஜோதிபாசு என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னா், படகு கரை ஒதுங்கியதும் பாதுகாப்பான முறையில்  கயிறு போட்டு கட்டி வைக்கப்பட்டது. படகின் உரிமையாளர்கள் வந்து படகில் ஏற்பட்ட பழுதை நீக்கி மீண்டும் புதுச்சேரிக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Hole ,Mediterranean ,
× RELATED துருக்கியில் கேபிள் கார் விபத்து 23 மணி...