×

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு சிறை

சிவகங்கை, அக். 31: மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (எ) குமார் (41). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவர். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் காளையார்கோவிலில் தங்கி கட்டிட வேலை பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

Tags : Sivagangai ,Sivakumar (A) Kumar ,Kodikulam ,K.Pudur ,Madurai district ,Kalaiyarkoil ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா