×

வெள்ளிச்சந்தை அருகே நடந்து சென்ற முதியவர் மொபட் மோதி படுகாயம்

குளச்சல், அக்.31: வெள்ளிச்சந்தை அருகே பெருவிளை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் (73). இவர் சம்பவத்தன்று மேலசங்கரன்குழி அருகே பரப்புவிளையில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட் பண்டாரம் மீது மோதியது. இந்த விபத்தில் பின்தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் மொபட்டை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சாஜி மனைவி ரெபேக்கா (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Silver Market ,Kulachal ,Bandaram ,Peruvilai Amman Koil Street ,Parappuvilai ,Melashankarankuzhi ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா