×

பழவேற்காடு மீனவர்கள் வருகிற 2ம் தேதி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

 

திருவள்ளுர்: பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வருகிற 2ம் தேதி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்-3′ என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை வருகிற 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான இறுதிகட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ 1ம் தேதி மாலை 5.26 மணி அளவில் தொடங்க இருக்கிறது.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வருகிற 2ம் தேதி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் கட்டப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.

 

Tags : Pazhaverkadu ,Thiruvallur ,Fisheries Department ,Indian Space Research Organisation ,ISRO ,Satish… ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...