×

இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடு

இலுப்பூர், டிச.31: இலுப்பூரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் திருவாதிரையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இலுப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில் உள்ளது. பட்டினத்தாரால் பாடப்பட்ட இக்கோயிலில் திருவாதிரையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்ச்சியையொட்டி நடராஜருக்கு பால், பழம், பன்னீர், தேன், நெய், இளநீர், சந்தனம், திரவியபொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மாள் மற்றும் மாணிக்கவாசகருடன் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவாசகம் முற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Thiruvathira ,Iluppur Ponvasinathar Temple ,
× RELATED மாநில அளவிலான தடகள போட்டி துவக்கம்