×

ஜி.டி.நாயுடு பெயர் ஜாதியின் அடையாளமல்ல: வைரமுத்து பேட்டி

சென்னை: ஜி.டி.நாயுடு பாலத்தில் நாயுடு என்பது ஜாதியின் அடையாளமாக தனித்து பார்க்கவேண்டியதில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதியின் பெயர் பழங்கால பெரியவர்களின் பெயரோடு ஒட்டி வந்துள்ளது. ஜாதிப் பெயர் அவர்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் அதை ஜாதியின் பெருமிதம் என யாரும் கருதக்கூடாது. சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்தார்.

Tags : G. ,D. ,Vairamuthu Petti ,Chennai ,G. D. Poet Vairamuthu ,Naidu ,Naidu Bridge ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!