×

20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு நாமம் போட்டு அரை நிர்வாண கோலத்தில் பாமகவினர் மனு

தா.பழூர், டிச.31: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி நாமம் போட்டு அரை நிர்வாணத்துடன் மனு கொடுக்க்க வந்தனர்.
வன்னியர்களுக்கு20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டி பாமகவினர் நெற்றியில் நாமத்துடன் அரை நிர்வாணத்துடன் தா.பழூர் கடை வீதியில் இருந்து பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு ஒன்றிய அலுவலகம் நோக்கி சென்றனர். நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் தா.பழூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டி மனு அளித்தனர். நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறையில் பாமக சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் உலக சாமிதுரை தலைமையில், செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து கோஷமிட்டபடி பேரணியாக சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதிலுள்ள சதவீதத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழக்கும்படி மனு கொடுத்தனர். இதில் பாமக பொறுப்பாளர்கள் ஒன்றிய சேர்மன் தேன்மொழி, மதுரா செல்வராசு, கோட்டை செல்வராசு உட்பட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் திரளாக கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்:  ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் சாலையில் இருந்து பைக்கில் ஊர்வலமாக சென்று திருச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானத்திடம் பாமகவினர் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Pamakavinar ,
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...