- தேவர் குருபூஜை விழா
- பசும்பொன்
- துணை ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- எடப்பாடி
- ராமநாதபுரம்
- 118வது ஜெயந்தி விழா
- முத்துராமலிங்க தேவர்
- Kamudi
- ராமநாதபுரம் மாவட்டம்
- குரு பூஜை விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழா, ஆன்மீக விழாவாக நேற்று முன்தினம் துவங்கியது. 3வது நாளான இன்று தேவர் குருபூஜை விழா, அரசு விழாவாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். துணை ஜனாதிபதி மற்றும் முதல்வர் வருகைக்காக நினைவிடத்தை சுற்றி உச்சக்கட்டமாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குருபூஜை விழாவையொட்டி தென்மண்டல ஜ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா கண்கா தலைமையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
* பெண் ஏட்டு திடீர் மரணம்
தேவர் குருபூஜையொட்டி கமுதி பகுதி காவல் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த ஏட்டு கலைவாணி (41) நேற்று முன்தினம் வந்தார். இரவில் கமுதி தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அவருக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். சக போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் ஏற்கனவே கலைவாணி இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலைவாணி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறந்த கலைவாணியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
