- அஇஅதிமுக
- சசிகலா
- Avaniyapuram
- மதுரை
- பசும்பொன் முத்துராமங்க தேவர் குரு பூஜை விழா
- பசும்போன், ராமநாதபுரம் மாவட்டம்
அவனியாபுரம்: அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மதுரை வரும் சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால், அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமங்கத்தேவர் குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக். 30) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மதுரை வரும் சசிகலாவை வரவேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் அவனியாபுரம் பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ‘‘2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்கு சின்னம்மா (சசிகலா) பிள்ளையார் சுழி போட வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது. இது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
