- உடன்குடி மார்க்கெட் தெரு சந்திப்பு
- உடன்குடி
- மார்க்கெட் தெரு சந்திப்பு
- உடன்குடி வடக்கு பஜார்
- நெல்லை
- நாசரேத்
- சாத்தான்குளம்
- வெட்டியான்விளை
- உதங்குடி பஜார்
- 4 சந்திப்பு
- மேற்கு சாலை
- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- பரமன்குறிச்சி…
உடன்குடி, அக்.30: உடன்குடி வடக்கு பஜார் பகுதியிலுள்ள சந்தையடி தெரு சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாகும். நெல்லை, நாசரேத், சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி பஜார் 4 சந்திப்பு வழியாக அனைத்து வாகனங்களும் வரும் மேற்கு ரோடு மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர், பரமன்குறிச்சி வழியாக வாகனங்கள் வரும் வடக்கு ரோடு முக்கிய சாலையாகும். இந்த இரு சாலையில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்களும் இதே வழியில் வந்து உடன்குடி பஸ் நிலையம் சென்று இதே வழியில் திருப்பி வரும் ஒரே ரோடு ஆகும். இந்த சந்திப்பு ரோட்டில் தான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்கும் ஆண்கள், பெண்கள் தினசரி பஸ்சுக்காக ஏறி இறங்குகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க உடனடியாக இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். அல்லது உயரமான உறுதியான பேரிகார்டுகள் நிரந்தரமாக வைக்க வேண்டும் என கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் சார்பில் கலில்ரகுமான் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
