×

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட நேரம் மாற்றம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும்

நாகர்கோவில், அக்.30: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 30ம் தேதி (இன்று) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணைய காணொலி காட்சி ஆய்வில் 30ம்தேதி (இன்று) காலை 11 மணிக்கு கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் மாவட்ட கலெக்டர் முற்பகல் 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தேர்தல் ஆணைய காணொலி ஆய்வில் கலந்து கொள்வார். எனவே 30ம் தேதி அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் முன்னதாக காலை 9 மணிக்கு நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagercoil ,Kumari District ,Collector ,Azhugumeena ,Kanyakumari district ,District ,Office ,Nanjil Conference Hall… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா