×

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

கிருஷ்ணகிரி, அக். 30: பர்கூர் ஒன்றியம், வெண்ணாம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழாசிரியை அமலா ஆரோக்கியமேரி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆங்கில விரிவுரையாளர் உமாபிரியா பங்கேற்று, இலக்கியம் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில், தமிழ் இலக்கியங்களின் சிறப்பை ஆங்கில இலக்கியத்தோடு ஒப்பிட்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். மேலும், தமிழ் இலக்கியம் பிற இலக்கியங்களை விட மேன்மையுடையதால், தமிழை நேசிப்போம், வாசிப்போம், சுவாசிப்போம் என பேசினார். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Koodal festival ,Krishnagiri ,Vennampally Government High School ,Bargur Union ,Panneerselvam ,Amala Arogya Meri ,District Teacher Education and Training… ,
× RELATED பைக் கவிழ்ந்து வாலிபர் பலி