×

மாநில ஹாக்கி போட்டியில் நாகரசம்பட்டி அணி வெற்றி

போச்சம்பள்ளி, டிச.9: நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், என்.எச்.சி நாகரசம்பட்டி அணி முதலிடம் பிடித்து பரிசை தட்டி சென்றது. சென்னை சிட்டி போலீஸ் அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெஸ்ட் ஷோன் போலீஸ் அணி மூன்றாம் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ஞானசேகரன், ரங்கநாதன், இளங்கோ, குணா.வசந்தரசு, குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nagarasampatti ,Pochampally ,Nagarasampatti Government Boys’ ,Higher Secondary ,School ,Tamil Nadu ,NHC Nagarasampatti ,
× RELATED சூதாடிய 4 பேர் கைது