×

SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருள் தொடர்பில், TNUSRB SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளானது 10.10.2025 அன்று முதல் திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது.

பயிற்சி வகுப்பின் விவரங்கள் பின்வருமாறு:

பயிற்சி வகுப்பு

TNUSRB SI
(10.10.2025 ( முதல்)

பயிற்சி வகுப்பின் நேரம்

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும்

எனவே, TNUSRB SI போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகவும்;

அலுவலக முகவரி:

மாநில தொழில்நெறி வழிகாட்டும்மையம்,
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32.
தொலைபேசி எண்: 044-22500134, 9361566648

முதன்மை செயல் அலுவலர்/இயக்குநர்

மாநில தொழில்நெறி வழிகாட்டும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

Tags : Chennai ,State Vocational Guidance Center ,and Training Department ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...