×

வனவிலங்குகள் சேதம் செய்யாத பயிர் சாகுபடி விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

 

கோவை, அக்.29: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாய கடன் மற்றும் நிதி அளவு, கோட்ட அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ஆர்டீஓ ராமகிருஷ்ணன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் அழகிரி, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சித்தார்த்தன், வேளாண் விற்பனை மையம், வருவாய்த்துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடப்பாண்டில் எந்தந்த பயிர்களுக்கு விவசாய கடன்கள் வழங்குவது (ஸ்கேல் ஆப் பைனான்ஸ்) குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில், ‘‘ விவசாயிகள் அவர்களின் பயிர் சாகுபடிக்கு தேவையான கடன்களை தடையின்றி வழங்க வேண்டும். மர வளர்ப்பு கடன் கிடைப்பதில்லை.
5 முதல் 8 வகையான மரங்கள் சாகுபடிக்கு கடன் கிடைக்கிறது. ஆனால், 14 வகையான மரங்கள் சாகுபடி செய்ய கடன் வழங்க வேண்டும்.

Tags : Coimbatore ,Coimbatore District Collector ,RTO Ramakrishnan ,Alagiri ,
× RELATED அறுவடை சீசன், சோளம் தேடி திரியும் யானைகள் ரத்த தானம் முகாம்