×

நெற்பயிர்களை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை

சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்த பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த பருவ மழையினால் விவசாய பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மழை பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரை தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளை சென்றடைய போதுமான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல்மணிகள் நனைந்து வீணாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்கப்பட வேண்டும். அத்துடன் மழை தாக்கத்திலிருந்து மக்களை காக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

Tags : Vijay ,Tamil Nadu government ,Chennai ,TTV ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி