×

அம்பிகா பரமேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம்

காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் வாணியர் தெருவில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி மருதவாணேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 21ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நிறைவு நாளான நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Ambika Parameswari Temple ,Karimangalam ,Kanda Sashti festival ,Ambika Parameswari Marudhavaneswarar Temple ,Vaniyar Street, Karimangalam ,Ganapati Puja ,Lord ,Kanda Sashti ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா