×

தூத்துக்குடியில் அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைபந்து போட்டி இன்று துவக்கம்

தூத்துக்குடி,அக்.29: தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிவாஜிதீன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் 15வது ஆண்டாக வ.உ.சி துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் இன்று (29ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு துறைமுக ஆணைய கோப்பைகளும், சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் ரொக்க பரிசுகளும் வழங்கப்படும். போட்டி முடிவில் தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த்குமார் புரோகித், ஆணையத் துணைத்தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்க உள்ளனர். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Tags : All India level inter-college ,tournament ,Thoothukudi ,Thoothukudi District Basketball Association ,President ,Brahmanandam ,Sakul Sivajideen ,Treasurer Rajkumar ,All India ,VOC Port Authority Cup ,Thoothukudi… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா