×

ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பாதையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம், டிச. 31: பழநி தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் திண்டுக்கல், மதுரை, தேனி, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக ஒட்டன்சத்திரம் வழியாக செல்வர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டுக்கல்- பழநி தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வர துவங்கியுள்ளனர். இந்நிலையில் நடைபாதையில் ஒரு சில இடங்களில் பேவர்பிளாக் கற்கள் உடைந்தும், ஆங்காங்கே முட்செடிகள் வளர்ந்தும் பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. தவிர இரவுநேரங்களில் மதுபிரியர்கள் மதுபானங்களை குடித்து விட்டு பாட்டில்களை இந்த நடைபாதையிலே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பக்தர்களின் கால்களில் காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பாதைகளில் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து திடீர் கடைகளை அமைத்துள்ளனர். எனவே மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் இவற்றை எல்லாம் அகற்றுவதுடன், பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை, முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : footpath ,
× RELATED நடைபாதை, பூங்கா வசதியுடன் மணலி ஏரி...