கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

ராசிபுரம், டிச.31: வெண்ணந்தூர் அருகேயுள்ள வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சுரேஷ்(24). அதே பகுதியில் உள்ள கோழி தீவனம் அரவை ஆலையில், தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் அப்பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி அவரை மீட்டனர். ஆனால், அவருக்கு தலையில் அடிபட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>