×

கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்

 

கொடைக்கானல், அக்.28: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பூம்பாறை பிரிவு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மோகன பிரசாத் (24) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Kodaikanal ,Kodaikanal police ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா