சென்னை: எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மொத்தமாக 331 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
