×

கீழடிக்கு 2 நாள் லீவ்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இன்று மருதுபாண்டியர் குருபூஜை நடக்க உள்ளது. அக். 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்க உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்றும், அக். 30ம் தேதியும் கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Keezhadi ,Sivaganga ,Marudhu Pandiyar Guru Puja ,Kalaiyarkoil ,Thevar Guru Puja ,Pasumpon ,Ramanathapuram district ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...