×

விஜய்யை பாஜ முடக்கி வைத்துள்ளதா? வானதி பதில்

கோவை: கோவை சுங்கம் பகுதியில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஏன் ஆறுதல் சொல்லவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம்தான். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் போது, நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை பாஜ முடக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம். கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜய்க்கு வரவேற்பு அதிகரித்துள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை. தவெக மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம். சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு கூறினார்.

 

Tags : BJP ,Vijay ,Vanathi ,Coimbatore ,BJP National Women's Wing ,Vanathi Srinivasan ,Sungam ,Karur ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்