×

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் பொறுப்பாளர் பேச்சு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிரிஷ் சோடங்கர் பேசுகையில் ‘‘ நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பூத் கமிட்டியை பலப்படுத்துவதை நோக்கமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அமல்படுத்தவது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, தமிழகத்தில் வாக்கு திருட்டு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

Tags : Booth Committee ,Congress ,Chennai ,Sathyamoorthy Bhavan ,Tamil Nadu Congress Committee ,President ,Selvapperundhakai ,All India Congress ,Tamil ,Nadu ,Girish Chodankar ,Suraj M.N. Hegde ,Girish… ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்