×

தமிழக பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஆஸ்திரேலியாவில் பதக்கங்களை குவித்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்க வேட்டையை நிகழ்த்திக் காட்டி, பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்களின் அபாரச் சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். மேலும், மேலும் நீங்கள் பெற்று வரும் வெற்றிகளால், விளையாட்டுத் துறையில் உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்து வருவது உறுதியாகி வருகிறது என கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Chennai ,Australia ,Xtala ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...