- நைனார் நாகேந்திரன்
- டெல்டா மாவட்டங்கள்
- வல்லம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- அலக்குடி
- தஞ்சாவூர் மாவட்டம்
வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நடைபெறும் கொள்முதல் பணிகளை நேற்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம். கொள்முதல் தாமதத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி தான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி என்பது சத்தான அரிசியாகும். இது மத்திய அரசு கொண்டு வந்த ஒரு நல்ல விஷயமாகும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
