×

தனலட்சுமி பள்ளி மாணவர்கள் களப்பயணம்

கடையநல்லூர், அக்.26: புன்னையாபுரம் தனலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் உணவின் அவசியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக களப்பயணம் மேற்கொண்டனர். புன்னையாபுரம் தனலட்சுமி இண்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகம் சார்பில் புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஒரு வயல்வெளிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்குள்ள விவசாயி ஒருவர், மாணவர்களுக்கு விவசாயத்தைப் பற்றியும், ஆரோக்கியமான விவசாயம் செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து புன்னையாபுத்தில் உள்ள தனலட்சுமி அரிசி ஆலைக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்கு அரிசி ஆலையின் உரிமையாளரும், தனலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளருமான திருமலைக்குமார், மாணவர்களிடம் அரிசி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் அனைவரும் உணவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டனர்.

Tags : Dhanalakshmi School ,Kadayanallur ,Punnaiyapuram Dhanalakshmi International School ,Puliyangudi Chinthamani ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா